பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (18:01 IST)
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை நரசிம்ம பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
ஒவ்வொரு ஆண்டும் நரசிம்மர் பிரம்மோற்சவம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு நாளை தொடங்குகிறது. 
நாளை அதிகாலை  5 மணிக்கு கொடியேற்று விழா நடைபெறும் என்றும் அதன்பிறகு நாளை மறுநாள் சிம்ம வாகனத்தில் உற்சவர் அருள் பாலிக்கிறார் என்றும் தெரிகிறது.. 
 
29ஆம் தேதி கருட சேவை அதன் பிறகு ஜூலை ஒன்றாம் தேதி பல்லக்கில் நாச்சியார் வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது. ஜூலை மூன்றாம் தேதி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்