அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
03.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள். பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
விசாகம்:
இந்த மாதம் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும்.
அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
கேட்டை:
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும்.
பரிகாரம்: குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 01, 02, 28, 29