ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – கன்னி

Prasanth K

புதன், 30 ஜூலை 2025 (18:01 IST)
அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  புதன் அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்து முடியும். அலைச்சல்கள் குறையும். சுபச்செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்யம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத் திற்கு தேவையான பண உதவி கிடைக் கும். தொழில் விருத்தியடையும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரி களின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர் களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடை யில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல்துறையினருக்கு முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும்.

உத்திரம்:
இந்த மாதம் பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சர்ப்பசாந்தி செய்வது, சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

சித்திரை:
இந்த மாதம் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பணவரவுகளும் சுமாராகவே இருக்கும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்