ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – துலாம்

Prasanth K

வியாழன், 31 ஜூலை 2025 (07:01 IST)
அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  புதன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025  அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  புதன் லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். கலைத்துறைய்னருக்கு பயணங்கள் உண்டாகும். அரசியல்துறையினருக்கு பொருளாதாரம் ஏற்றம் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

சித்திரை:
இந்த மாதம் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

ஸ்வாதி:
இந்த மாதம் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.  எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

விசாகம்:
இந்த மாதம் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 26, 27

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்