குன்றத்தூர் முருகன் கோவிலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம்: பக்தர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (18:28 IST)
சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற இருப்பதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வருவதுண்டு 
 
மிகவும் புகழ் பெற்ற இந்த கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் கடந்த 1969 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
வரும் நவம்பர் மாதம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்