கடந்த இரண்டு நாட்களாக, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 3.76 கோடி ரூபாய் இருந்ததாகவும், 1908 கிராம் தங்கம் 21,000 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் எந்த மாதமும் இல்லாத அளவில் இந்த மாதம் வெளிநாட்டு கரன்சிகள் அதிகம் இருந்தால், வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் வந்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கரன்சிகள் இருந்ததாகவும், அரபு நாடுகளில் இருந்து சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளதாக அந்த நாட்டு கரன்சிகளில் இருந்து தெரிய வருகிறது.
மொத்தமாக 1234 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்ததாகவும், இவர்கள் அனைவரும் கந்த சஷ்டி திருவிழாவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளும் உண்டியலில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.