வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக, தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவில் பரவலாக மழை பெய்து வந்தது. அந்த வகையில் திருப்பதி மற்றும் திருமலையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று 6 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் அருவிபோல தண்ணீர் கொட்டுவதாகவும், எனவே பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.