அகமதாபாத் மைதானத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் விட்டதால் பாகிஸ்தான் அணிக்கே அவமரியாதை என்று கூற முடியாது. இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது சில ரசிகர்களுக்கு எமோஷனல் இருக்கத்தான் செய்யும். அந்த எமோஷனனை வைத்து ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வீரர்களை இந்திய ரசிகர்கள் அவமானப்படுத்தினார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார்.