மகாளய அமாவாசையின் சிறப்புகள் என்னென்ன?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (18:17 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் மகாளய அமாவாசை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
மகாளய அமாவாசை தினத்தில் நாம் முன்னோர்களின் ஆத்மாக்கள் ஒன்று சேர்ந்து நம்மை ஆசீர்வதிக்கும் என்பதால் அந்த நேரத்தில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏராளமான புண்ணியம் கிடைக்கும் என்றும் நாள்பட்ட பிரச்சனைகள் உடனடியாக தீரும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த மகாளய அமாவாசை தினத்தில் ஒருவர் தன் மறைந்த தாய் தந்தையர் தாத்தா பாட்டி ஆகியோர்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம். அதன் மூலம் அவர்களது ஆசிகளை நேரடியாக பெறலாம்.  
 
அவர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம் முறையாக செய்யும்போது குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நமது முன்னோர்கள் ஒருபோதும் நம்மை சபிக்க மாட்டார்கள் என்பதால் முன்னோர்களின் ஆசி பெற தர்ப்பணம் செய்வது நல்லது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்