தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (10:56 IST)
முருகனை வழிபட சஷ்டி உகந்த நாள். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். 'சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பது அனுபவ மொழி.


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி. இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.இந்த நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம்.

வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்