திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள். திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள் பெருமாளை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும், இன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.