நகத்தை பராமரிப்பதற்கான சில பயனுள்ள அற்புத குறிப்புகள் !!

Webdunia
நல்ல ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் தென்படும் நகங்கள், கைகளுக்கு கவர்ச்சி தரும். மனித உடம்பின் ஆரோக்கியம் நகங்களில் தென்படும்.
நகப் பூச்சை தொடர்ந்து உபயோகிப்பதால், நகங்கள் மஞ்சளாக தோற்றமளிக்கும். சற்று எலுமிச்சம் பழச்சாறு தேய்த்து, 10 நிமிடத்திற்கு பின், பஞ்சால் துடைத்து  எடுத்தால், மஞ்சள் தோற்றம் அகன்று விடும். 
 
நக முனைகளை சுரண்டி சரி செய்வதற்கு, நெயில் பைல் உபயோகிக்க வேண்டும். பிளேடு உள்ளிட்ட கருவிகளை உபயோகிப்பதால், நக முனைகள் சிதைந்து  போகும்.
 
சிவந்த நிறமுடையவர்கள் அழுத்தமான கலரில் உள்ள நகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். சிவப்பும், இளஞ்சிவப்பும் அவர்களுக்கு பொருத்தமானவை.
 
கோடை காலங்களில் விரல்களும், நகங்களும் உலர்ந்து போக வாய்ப்பு உண்டு. ஹேண்ட் கிரீம் தடவிக் கொண்டால் வறட்சி நீங்கி விடும். 
 
நகத்தை அஸ்ட்ரின்ஜென்ட் லோஷன் பஞ்சால் துடைத்து, அதன் பிறகு நகப் பூச்சை போட வேண்டும். நகத்தில் ஈரம் இரண்டுக்கும் பொழுது, பூச்சு போடக் கூடாது.
 
நகப் பூச்சை அடர்த்தியாக போடக் கூடாது. இரண்டு அல்லது மூன்று தடவை லேசாக பூச வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு தான் மறுமுறை பூச வேண்டும்.
 
நகத்திற்கு போடும் போது, நகக் கண்களின் இரு புறத்திலும் ஒரு மில்லி மீட்டர் இடைவெளி விட்டு பட்டையாக போட வேண்டும். இது, நகங்களின் நீளம் கூடுதலாகத் தோற்றமளிக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்