முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையை போக்கும் பசலைகீரை !!

Webdunia
எத்தனையே மருந்துகள், செயற்கை முடி வளர்சியை தூண்டும் எண்ணெய்கள் இருந்தாலும் இயற்கை முறையும் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை தூண்ட செய்வதே சிறந்ததாகும். இதற்கு சிறந்த தீர்வாக பசலை கீரை பெரிதும் உதவி புரிகின்றது.

பசலைக் கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி யின் ஆதாரமாக உள்ளது. இந்த வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து தலைமுடிக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இது முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை சகல பிரச்சினைக்கு தீர்வாக அமைகின்றது.
 
தேவையான பொருட்கள்: நறுக்கிய பசலைக் கீரை 3 கப், பிரெஷ் ரோஸ்மேரி இலைகள் 2 ஸ்பூன். செய்முறை: பசலைக் கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் போடவும். அந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைக்கவும்.
 
இந்த கலவையுடன் ரோஸ்மேரி இலைகளை கலக்கவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலையில் தடவவும். அரை மணிநேரம் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றவும்.
 
பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைகிறது, இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது , முடி உதிர்தல் குறைகிறது, பொடுகு குறைகிறது. மேலும் இளநரையைப் தடுக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது. வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தி நல்ல தீர்வை தருகின்றது.
 
வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.
 
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்