அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
பச்சை முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதனுடன் தேனைக் கலந்து முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். பின்பு நன்கு சோப்பு போட்டுக் கழுவிவிட வேண்டும். ஏனென்றால், தேனும் முட்டையும் முழுமையாகச் சருமத்தை விட்டு நீங்க வேண்டும்.
வறண்ட சருமம் சரியாக நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை நன்கு அரைத்து, க்ரீம் போல மாற்றி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவடையும்.
சந்தனக்கட்டையை உரசியோ, அல்லது சந்தனக் கட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யுடனோ, பால் மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலக்கி, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து உலர்ந்ததும் கழுவ வேண்டும்.