உலர் சருமத்தை மாற்றும் இயற்கை அழகு குறிப்புகள் !!

Webdunia
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை குணமாக்குவதை  உணரலாம்.

வெள்ளரிக்காயை அரைத்த விழுது, ஆலோவேரா ஜெல் இவற்றை நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும்.
 
மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.
 
வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகம்  கழுவிக்கொள்ளவும்.  
 
5 ஸ்பூன் தேன், 5 ஸ்பூன் தூள் மற்றும் 2 ஸ்பூன் மாவு கொண்டு சாக்லெட் பேக்கும் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு 15  நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.  
 
வீட்டில் கிரீன் டீ-யுடன் ஏதேனும் கிரீமுடன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிக்கொள்ளவும்.
 
உலர் சருமத்தில் இருந்து விடுபட இஞ்சி சாறு எடுத்து, தேன் மற்றும் பன்னீர் கலந்து பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்