மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துசாப்பிட்டு வந்தால் நீங்கும். முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும்.
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து,உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர,சொறி , சிரங்கு,கரப்பான் , போன்ற தோல் நோய்கள் குணமாகும்.மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.