பாதாம் எண்ணெய்யிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
முகத்திற்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது நல்லது. எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு தான் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் தான் முகத்தில் இருக்கும் பிசுபிசுப்பானது விலகும்.
கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொழிவுடன் காணப்படும்.