வெள்ளை முடியை கருப்பாக்க உதவும் டிப்ஸ் பற்றி பார்ப்போம் !!

Webdunia
சனி, 28 மே 2022 (11:07 IST)
எந்த வகை வெள்ளை முடியாக இருந்தாலும் அதை வேரிலிருந்து கருப்பாக வளர வைக்கக்கூடிய ஒரு குறிப்பை பற்றி தெரிந்துக்கொள்வோம்.


ஆண்களுக்கு சிலபேருக்கு தாடி மீசையெல்லாம் கூட சீக்கிரம் நரைக்க ஆரம்பித்தது விடும். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த எண்ணெய்யை மீசை தாடியில் தேய்த்து வந்தாலும் அந்த நரை முடி வெள்ளையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பீர்க்கங்காயை வாங்கி நன்றாக கழுவி சுத்தமாக துடைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, ஒரு காட்டன் துணியின் மேல் பரவலாக வைத்து நிழலிலேயே வைக்கவேண்டும். வெயிலில் வைத்து காய வைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும். பீக்கங்காய் நிழலிலேயே காய்ந்து சுருங்கி வரும் வரை உலர வைக்க வேண்டும்.

ஒரு மீடியம் சைஸ் பீர்க்கங்காயை வெட்டி உலர வைத்துக் கொண்டால் 200 மி. லி. அளவு செக்கு தேங்காய் எண்ணெய்யை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு இடும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடு செய்த பின்பு, உலர்ந்த பீர்க்கங்காய் துண்டுகளை அதில் போட்டு, பின்பு கருஞ்சீரகப் பொடி 1 ஸ்பூன், நெல்லி பொடி 1 ஸ்பூன், வெந்தயப் பொடி 1 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் அந்த எண்ணெய்யோடு சேர்த்து நன்றாக காயவைத்து அப்படியே அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட வேண்டும்.

பீர்க்கங்காயை எண்ணெய்யில் போட்டு காய் நன்றாக அந்த எண்ணெயில் காய்ந்து கருப்பு நிறம் வந்து சுருங்கிய பின்பு, இறுதியாக அந்த மூன்று பொடியை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த எண்ணெயானது இரும்பு கடாயில் 4 லிருந்து 5 மணி நேரம் வரை நன்றாக ஆறிய பின்பு, ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்யை எப்படி உங்கள் தலைக்கு வைப்பீர்களோ அதே போல் தான் இந்த எண்ணெய்யையும் தினம்தோறும் வேர்க்கால்களில் படும்படி தடவ வேண்டும். வெளியில் சென்றால் எண்ணெய் வடியும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெய்யை இரவு நேரத்தில் தலையில் தடவி நன்றாக ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை தலைக்கு குளித்தாலும் சரி இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல வித்தியாத்தை காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்