சுக்கு பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

சனி, 28 மே 2022 (09:42 IST)
சுக்கு பால் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் சுக்கு தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.


சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் தொண்டை புண் மாயமாய் மறையும். மேலும் சுக்கு தொற்றுநோயைக் குறைப்பதில் மிகச்சிறந்த பொருள்.

உணவு உண்ட பின் வயிறு உப்புசமாக இருந்தால், அதிலிருந்து விடுபட சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்கலாம்.  சுக்கு பாலைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதுவும் சுக்கு பாலில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சத்து இன்னும் அதிகரித்து, உடலுக்கு இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.

தொடர்ந்து விக்கலுக்கு சுக்கை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் குடிக்க வேண்டும். சுக்கு வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்க்கும் அளவில் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதற்கு தினமும் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.

சுக்குவை பாலில் போட்டு குடிப்பதால், அது மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்றவற்றில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்