வீட்டு சமையலறை பொருட்களை வைத்து சரும பராமரிப்பு

Webdunia
நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமல் இருந்தது.
கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ  வேண்டும்.
 
உருளைக்கிழங்கை அரைத்து அதனை மூக்கின் மேலே கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். 
 
பேக்கிங் சோடாபேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில்  உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.
 
சாறு எலுமிச்சை சாறும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதற்கு எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து வர, கரும்புள்ளிகள் அகலும்.
 
பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
 
வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள்  உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும்.
 
ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர்  பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்