பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க உதவும் சில குறிப்புகள் !!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:21 IST)
பாதங்களில் வெடிப்பு சிலருக்கு தீரா பிரச்சனை. அதுவும் வெறும் கால்களில் நடந்து கொண்டேயிருப்பவர்களுக்கு பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும்.


நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

தொடர்ந்து கடுகு எண்ணெய்யை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.

கண்டங்கத்திரியின் இலை,காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்