செடி முழுவதும் மருத்துவ பயன்பாடு கொண்ட கீழாநெல்லி !!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:45 IST)
கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும்.


நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி விடும்.

கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊறவைத்து பிறகு குளித்தால் அரிப்பு சம்பந்தமான நோய்கள் வராது.

குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவில் மாத்திரைகளாகச் செய்து காலை மாலை சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

கீழா நெல்லியுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாட்கள் சாப்பிட கல்லீரல் தொடர்பான நோய்கள், சோகை, இரத்தமின்மை ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்