மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தினை பெற உதவும் வெண்ணெய் !!

Webdunia
வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க  வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். 

வெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்து இருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ள உதவுகிறது. அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்து கொள்ளலாம். 
 
வாழைப்பழம் மற்றும் வெண்ணெய் கலந்த கலவை உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பை தரும். ஒரு வாழைப்பழம், ஒரு தேக்கரண்டியளவு உப்பு  இல்லாத வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.  இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம், முகம் பளபளப்பாகும். 
 
சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊறவிட வேண்டும். பின்னர் சிறிது காட்டன் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித்  தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.
 
வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது கலவையை எடுத்து முகத்தில்  அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவுங்கள்.
 
இந்த முறையை நீங்கள் வாரத்தில் 2 முதல் 3 முறை செய்தால் விரைவில் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தினை பெறலாம். வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணெய் இரண்டும் சேர்ந்த கலவை உங்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பு நிற தோல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்