சாப்பிட்டவுடன் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யக்கூடாது..!

வியாழன், 25 மே 2023 (18:35 IST)
சாப்பிட்டவுடன் ஒரு சிலவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. தண்ணீர் குடித்தால் நாம் சாப்பிடும் உணவு செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். 
 
அடுத்ததாக சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது. செரிமானம் நடைபெறுவதற்கு தேவையான ஆற்றல் உடலுக்கு தேவைப்படும் நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் ஆற்றல் செலவாகும்.
 
அதேபோல் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக குளிக்க கூடாது. குளிக்கும்போது உடல் வெப்பநிலை மாறுவதால் செரிமான நேரத்தில் அது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். 
 
சாப்பிட்ட பிறகு புதை மற்றும் மது குடிக்க கூடாது. சாப்பிட்ட உணவுடன் நிகோடின் மற்றும் ஆல்கஹால் கலப்பதால் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்