ஒலியலைகளை காது உள்வாங்கி, காக்லியாவை அதிர்வடையச் செய்து, அலைகளை மூளைக்கு அனுப்பி ஒலியை உணர வைக்கிறது.
சாதாரணமாக 10 முதல் 15 டெசிபல் ஒலியை கேட்கும் திறன் போதுமானது. இந்த அளவை தாண்டி அதிக சத்தம் கேட்கும்போது காதில் பிரச்சனைகள் எழுகின்றன. இதன் விளைவாக, ஆரம்பத்தில் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்பட்டு, இறுதியில் காது கேட்கும் திறன் குறையும் ஆபத்தும் உள்ளது.