சாப்பாட்டுடன் சேர்ந்து பழங்கள் சாப்பிடலாமா?

செவ்வாய், 23 மே 2023 (19:27 IST)
சாப்பாட்டுடன் சேர்ந்து பழங்களை சாப்பிடக்கூடாது என்றும் பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும் என்றும் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 
 
காய்கறிகள், பால் பொருள்கள், தானியங்கள், அரிசி, இறைச்சி ஆகியவை சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடக்கூடாது என்றும் அவ்வாறு சாப்பிட்டால் நாம் சாப்பிடும் பழங்கள் நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடும் என்றும் முன்னோர்கள் எச்சரித்துள்ளனர்.
 
 அதேபோல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை மேம்படும் என்றும் பழங்களை சாப்பிடுவதில் சில நுணுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அமிலங்கள் அதிகம் உள்ள பழங்களை காலையில் சாப்பிடக்கூடாது. மற்ற பலன்களை காலையில் சாப்பிடலாம் காலையில் பழங்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும் என்றும் அதே சமயத்தில் கொழுப்புச்சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது என்றும் கூறப்படுகிறது.
 
மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதும் ஜீரணமாகும் என்பதால் காலை உணவாகவே பழங்களை சாப்பிடலாம் என்றும் அதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் உடலுக்கு தேவைப்படும் சர்க்கரை சத்து அதில் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்