எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை பதில்வினைக் குழு அறிமுகம்!

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (18:34 IST)

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கான பலனையும், நோயாளிக்கான ஆதரவையும் மேம்படுத்த பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை பதில்வினைக் குழு அறிமுகம்

 

துல்லியமான, பாதுகாப்பான இதய மற்றும் மூளை-நரம்பியல் இடையீட்டு சிகிச்சைகளுக்காக நவீன இமேஜிங் சாதனங்கள், நிகழ்நேர மருந்தளிப்பு கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டுள்ள புதிய கேத் லேப்-ம் தொடங்கப்பட்டிருக்கிறது.

பக்கவாத/ஸ்ட்ரோக் அறிகுறிகள் தென்படுவதிலிருந்து முதல் ஒரு மணி நேரத்திற்குள்- பொன்னான நேரத்திற்குள் சிகிச்சைப் பெறுவது உயிர்களை பாதுகாப்பதற்கும், மூளை சேதத்தைக் குறைப்பதற்கும் மிக முக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 

 

சென்னை, அக்டோபர் 14, 2025: பக்கவாதத்திற்கு மேம்பட்ட நவீன சிகிச்சையையும், நோயாளிகளுக்கு சிறப்பான ஆதரவையும் உடனடியாக வழங்குவதற்கு பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை பதில்வினை குழு என்பதை எம்ஜிஎம் மலர் மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 29-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் இந்த ஆண்டுக்கான உலக பக்கவாத தினத்திற்கு “ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது” என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனைக் குறிக்கும் விதத்தில் பக்கவாதத்திற்கான சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை மீண்டும் வாழத் தொடங்கியிருக்கிற ‘பக்கவாதத்தை வென்ற போராளிகளை’ இம்மருத்துவமனை கௌரவித்திருக்கிறது. 

 

மிக நவீன இடையீட்டு சிகிச்சைக்கான ஆஞ்சியோகிராபி சாதனங்கள் நிறுவப்பட்டுள்ள ஒரு மேம்பட்ட நியூரோ கேத் லேபையும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. மூளை மற்றும் முதுகுத்தண்டு நாள பாதிப்புகளுக்கு துல்லியமான நோயறிதலை செய்யவும் மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சையை வழங்கவும் அவசியமான நவீன இடையீட்டு ஆஞ்சியோகிராஃபி சாதனங்கள் இந்த கேத் லேப்பில் இடம் பெற்றுள்ளன.  ஆரம்ப நிலையிலேயே பக்கவாத பாதிப்பை அடையாளம் காண்பது, விரைவாக சிகிச்சைப் பெறுவது மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பேண முன்தடுப்பு நடவடிக்கைகள் மீதான முக்கியத்துவத்தை வவலுவாக முன்னிலைப்படுத்தும் நோக்கத்தோடு முதுநிலை மூளை நரம்பியல் மருத்துவர்கள் ஆற்றிய சிறப்புரைகளும் இந்நிகழ்வில் இடம் பெற்றன. 

 

அனபாண்டு லிமிடெட் இயக்குநர் திரு. ஜானகிராமன் விஜயக்குமார் செம்பியன், பிரபல திரைப்பட நடிகர் திரு. செந்தில், விசாகப்பட்டினம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சுங்கவரி துணை ஆணையர் திரு. வினய், ஜீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் திரு. S ஆவுடையப்பன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுள் முக்கியமானவர்கள். 

 

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் சிகிச்சைக்கான முதுநிலை நிபுணர் டாக்டர். S. கார்த்திகேயன் பேசுகையில், உயிரிழப்புக்கும், நீண்டகால திறனிழப்புக்கும் இரண்டாவது முக்கிய காரணமாக உலகளவில் பக்கவாதம்/ஸ்ட்ரோக் இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் பிற நரம்பியல் பாதிப்புகளால் ஒருங்கிணைந்து ஏற்படும் உயிரிழப்பை விட பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இறக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டினார். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 15000 நபர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது.  பக்கவாத பாதிப்பு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் உயர்ந்து வருவது குறிப்பாக அச்சுறுத்தும் போக்காக கருதப்படுகிறது; 45 வயதிற்கு கீழ்ப்பட்ட நபர்களுக்கு பக்கவாதம் அதிகரித்த எண்ணிக்கையில் வளர்ந்து வருவது ஒரு முக்கிய பிரச்சனையாகும். உடல் உழைப்போ, உடற் பயிற்சியோ இல்லாத, அவசர துரித வாழ்க்கை முறை, கட்டுப்பாட்டில் இல்லாத மிகை இரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை இதற்கு காரணமாக இருக்கின்றன. 

 

பக்கவாத அறிகுறிகள் தோன்றியதற்கு பிறகு வரும் முதல் மணி நேரம் பாதிக்கப்பட்ட நபர்களின் உயிர்களை காப்பாற்றவும் மற்றும் அவர்களது மூளையில் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் மிக முக்கியமானது என்பதால் ‘பொன்னான நேரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தின்போது உரிய காலஅளவிற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைவதற்கான விளைவுகளை அதிகமாக மேம்படுத்தக்கூடும். பக்கவாத சிகிச்சைக்கான அதிவேக பதில்வினை குழுவிற்கான தேவையை வலியுறுத்திய அவர் கூறியதாவது: “ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது” பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை விரைவாக அடையாளம் காண்பதும் மற்றும் பக்கவாதத்திற்கு சிறப்பான சிகிச்சை வழங்கும் திறன் கொண்ட மருத்துவமனைக்கு தாமதமின்றி நோயாளியை அழைத்துச் செல்வதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். PR. சாய் பிரஷாந்த், தனது உரையில் கூறியதாவது: “இம்மருத்துவமனை, ஒவ்வொரு நோயாளிக்கும் சாத்தியமுள்ள மிகச் சிறந்த மூளை நரம்பியல் சிகிச்சை பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்ய நோயாளியின் நலனை மையமாக கொண்ட முழுமையான சிகிச்சை அணுகுமுறையை அர்ப்பணிப்புடன் பின்பற்றுகிறது. 

 

நோயறிதல் தொழில்நுட்பத்தில் சிறப்பான முன்னேற்றங்கள், சிறப்பு திறன் கொண்ட பக்கவாத சிகிச்சை பிரிவுகள் ஆகியவை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிர்பிழைக்கும் விகிதங்களை குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படுத்தியிருக்கிறது. மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சையில் உயர்ந்த வெற்றி விகிதத்தின் ஆதரவோடு சிக்கலான மூளை மற்றும் முதுகுத்தண்டு இடையீட்டு சிகிச்சைகளை எமது நிபுணத்துவம் மிக்க மூளை நரம்பியல் நிபுணர்கள் குழு வழங்குகிறது.  

 

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையின், நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் உள்நாள நரம்பியல் அறுவைசிகிச்சைகள் துறையின் நிபுணர் டாக்டர். A அரவிந்த் குமார், “பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், “விழிப்புணர்வு மற்றும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை அளிப்பதன் வழியாக, உருவாக்கி மக்கள் மத்தியில் பக்கவாத பாதிப்பை குறைப்பதும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சமூக மக்களுக்கு உதவுவதும் எமது நோக்கமாகும்.  இந்தியாவில் பக்கவாத பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது, உடல் உழைப்பற்ற சோம்பலான பழக்க வழக்கங்கள், நீரிழிவு, கட்டுப்படுத்தப்படாத மிகை இரத்தஅழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை காரணிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. 

 

உள்நாள நரம்பியல் இடையீட்டு சிகிச்சைகள் பயனளிக்கும் பக்கவாத மேலாண்மைக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன.  தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சமச்சீரான உணவை உட்கொள்வது, இடர் காரணிகளான பிற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவற்றின் வழியாக பக்கவாத பாதிப்பு வராமல் தடுப்பதும் அதே அளவிற்கு முக்கியமானதாகும்.” என்று கூறினார்.

 

எம்ஜிஎம் ஹெல்த்கேர்-மலர் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள புதிய கேத் லேப்-ல் நவீன இமேஜிங் சாதனங்கள், மருந்தளிப்புக்கான நிகழ்நேர கண்காணிப்பு வசதி மற்றும் கதிர்வீச்சுக்கு வெளிப்படுவதை குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. துல்லியமான நோயறிதல் சேவைகளும், பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சை செயல்முறைகளும் இதனால் உறுதி செய்யப்படும். இந்த கேத் லேப்-ல் பன்முகத்திறன் கொண்ட சாதன அமைப்பு  தலையிலிருந்து கால்விரல் வரை கண்காணிப்பு வசதியையும் எளிதான அறுவைசிகிச்சை மேஜை கட்டுப்பாட்டையும் மருத்துவர்களுக்கு வழங்குகிறது.  இம்மருத்துவமனையில் உலகத்தரத்திலான உயர்சிகிச்சை, அனுபவம்மிக்க நிபுணர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் ஆதரவோடு வழங்கப்படுவதால் சிக்கலான பக்கவாத பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்