பப்பாளியின் அரிய மருத்துவப் பயன்கள்: செரிமானம் முதல் புற்றுநோய் வரை!
Mahendran
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (18:59 IST)
வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த பப்பாளிப் பழம், உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.
முக்கியப் பலன்கள்:
மலச்சிக்கல், அமிலத்தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.
இரத்த விருத்திக்கு உதவுவதுடன், இரத்த சோகைக்கு நிவாரணம் அளித்து, உடலுக்கு தெம்பூட்டுகிறது.
பெண்களுக்கு: மாதவிலக்கு சுழற்சியைச் சீராக்க உதவுகிறது.
பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' என்சைம் இதயத்திற்கு நல்லது, மேலும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
பச்சைப் பப்பாளி சாறு குடலிலுள்ள புழுக்களை வெளியேற்ற உதவும்.
உடலின் நச்சுக்களை சுத்திகரித்து, இளமையின் பொலிவைக் கூட்டும் தன்மை பப்பாளிக்கு உண்டு.
ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்தவர்கள், குடலில் அழிக்கப்பட்ட நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்யப் பப்பாளி சாப்பிடலாம்.
நரம்புகள் மற்றும் ஞாபக சக்தி பலப்படவும் பப்பாளி சிறந்தது.