கத்தரி வெயிலை சமாளிக்க தினசரி உணவில் இதையெல்லாம் சேர்த்து கொள்ளுங்கள்..!
சனி, 20 மே 2023 (18:59 IST)
கடந்த சில நாட்களாக கத்தரி வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மே 28ஆம் தேதி வரை அதிக வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்கள் உணவுடன் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மோர் கரும்புச்சாறு இளநீர் போன்றவற்றையும் அருந்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பழங்களை பொருத்தவரை சாத்துக்குடி திராட்சை தர்பூசணி ஆரஞ்சு ஆகிய பழங்களை சாப்பிடலாம் என்றும் எலுமிச்சை பழச்சாறை அடிக்கடி குடிப்பதால் வைட்டமின்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூடுமானவரை காபி, டீ ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் வெள்ளரிக்காய், கேரட், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியம் மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றும் குறிப்பாக கேழ்வரகு கூழ் சாப்பிடுவது நல்லது என்றும் கூறப்படுகிறது.