சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ ஆறவே ஆறாது என்று கூறப்படுவது ஓரளவு உண்மைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஒரு சிலருக்கு வருட கணக்கில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருக்கும், பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் அல்லது புண் ஏற்பட்டால் ஆறாமல் இருப்பதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணம்
குறிப்பாக கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் அதை கவனிக்காமல் விட்டால் அறுவை சிகிச்சை மூலம் கால் விரலை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் கால் கட்டைவிரல் உட்பட உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உடனடியாக ஆறிவிடும்.
ரத்தத்தின் சர்க்கரை அளவை இயற்கையாக சரி செய்ய முடியவில்லை என்றால் இன்சுலின் போட்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.