மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா (பாஜக ஆதரவு அணி) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இம்மா நிலம் புனேவில் இருந்து மும்பை நோக்கி இன்று அதிகாலையில், பேருந்து ஒன்று கொண்டிருந்தது. இப்பேருந்தில், 40 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அதிகாலை மும்பை –புனே நெடுஞ்சாலையில், லோனாவாலா என்ற பகுதியில் போகும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.