நாக்கு புற்றுநோய் என்பது வாய் முழுவதும் பரவக்கூடிய ஒரு கொடிய நோய் என்றும் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் நாக்கில் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
நாக்கில் ஏற்படும் பல்வேறு நோய்களில் ஒன்று புற்றுநோய் என்பதும் இந்த நோய் நாக்கில் தொடங்கி தொண்டை வரை வளரும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாய் புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்த நோயின் அறிகுறிகள் நாக்கில் எளிதில் தெரியும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆரம்பத்தில் இதனை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் தோன்றுவது, தொண்டை வலி, தொண்டையில் ஏதோ சிக்கிக் கொள்வது போன்ற உணர்வு, குரலில் மாற்றம், தாடை வீக்கம், வாய் அல்லது நாக்கில் உணர்வில்லாமல் இருப்பது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
புகையிலை பயன்படுத்துவோருக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. மது அருந்துவோருக்கும் இந்த நோய் தாக்க காரணமாகவும் இந்த நோய்க்கு உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்