ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இதையெல்லாம் சாப்பிடுங்கள்..!

Mahendran
வியாழன், 4 ஜனவரி 2024 (18:45 IST)
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஹீமோகுளோபின் அளவு குறைய குறைய பல்வேறு நோய்கள் வரும் என்பதால் ஹீமோகுளோன் அளவை சரியான உணவு பழக்க மூலம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். 
 
தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது மட்டும் இன்றி இரும்பு சத்து, கால்சியம் ஆகிய சத்துக்களும் கிடைக்கும். 

ALSO READ: ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை திருமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீராமர் சிலை திறப்பு
அதேபோல் பேரிச்சம்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். தினமும் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்பதும் ஆனால் அதே நேரத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் இதை தவிர்ப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் தன்மை உடையது. பருப்பு வேர்க்கடலை பட்டாணி பீன்ஸ் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க உதவி செய்யும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்