பெண்கள் தங்கள் தலை முடியின் கலரை மாற்றுவது தற்போது பேஷனாகி வருகிறது. இவ்வாறு பெண்கள் தலையில் உள்ள ஹேர் கலரிங் மாற்றம் செய்தால் ஆபத்தில் முடியும் என்று சரும நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
இயற்கையில் கருப்பு கூந்தல் தான் அழகு என்று முன்னோர்கள் கூறி வந்திருக்கும் நிலையில் ஒரு சிலரும் ஆரஞ்சு கலர், பிரவுன் கலர் என மாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இது ஆபத்தில் முடியும் என சரும நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கலர்களை உண்டாகும் வேதிப்பொருட்கள் அடங்கிய சாயம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும் என்றும் கூந்தலின் கருப்பு நிறத்தில் இருந்து அதிக வேறுபாடு இல்லாமல் லேசான மாற்றம் செய்தால் எந்த பிரச்சனையும் வராது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்
ஹேர் கலரிங் மாற்றும் போது முடி உதிர்தல் உள்பட பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமின்றி அந்த சாயங்கள் உள்ள வேதிப்பொருள்கள் அலர்ஜி காரணமாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் குறிப்பாக கண்களில் பிரச்சனை வர அதிக வாய்ப்பு இருப்பதாக சரும நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்