எலுமிச்சை தோலை வீணாக்க வேண்டாம்.. தலைமுடிக்கு பல நன்மைகள்..!

Mahendran

செவ்வாய், 27 மே 2025 (18:59 IST)
பலரும் எலுமிச்சையைப் பிழிந்தபின் தோலை வீணாக நினைத்து எறிந்து விடுகிறோம். ஆனால் அதில் தலைமுடிக்கு பல நன்மைகள் அடங்கியுள்ளன என்பது பலருக்கும் தெரியாது.
 
எலுமிச்சை தோலில் நிறைந்துள்ள வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது முடி வளர்ச்சியை தூண்டும். மேலும் தோலில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை நீக்கும் சக்தியும் இதில் இருக்கிறது.
 
தலைமுடியில் அதிக எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால், எலுமிச்சை தோலை நீரில் கொதிக்கவைத்து, ஆறிய பின் அந்த நீரை தலையில் தடவலாம். 15 நிமிடங்கள் கழித்து சாதாரணமாக குளித்தால் போதும். இதை வாரம் இருமுறை செய்தால் முடி மிருதுவாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
 
வேறு ஒரு வழியாக, எலுமிச்சை தோலை நன்றாக காய வைத்து தூளாக்கி, அதில் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, தலையில் தடவலாம். இது முடி உதிர்வைக் குறைத்து வேர்க்கடிவளத்தை மேம்படுத்தும்.
 
இது எல்லாம் இயற்கை வழிகள் என்பதால், தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைவுகள் தெரியும். எனவே, இனிமேல் எலுமிச்சை தோலை எறிந்து விடாமல், முடிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்!
 
ஆனால் இதை பயன்படுத்தும்ம் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்