மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாக அல்சைமர் காணப்படுகிறது. இது திடீரென ஏற்படும் நோயல்ல, மெதுவாக உருவாகி, நினைவாற்றலை குறைக்கும் ஒரு நிலையாக மாறுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நாளில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவார்கள். இன்று நடப்பது நாளைக்கு ஞாபகத்தில் இருக்காது. இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை உருவாக்கும். சில நேரங்களில், மிகவும் முக்கியமான விஷயங்களையும் நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.
உலகளவில் கோடிக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக நாம் எல்லோரும் சிறிய அளவிலாவது மறதியை அனுபவிப்போம். ஆனால், அல்சைமர் பாதித்தவர்கள் அடிக்கடி ஒன்றை மறந்து, தங்களே சொன்னதை மறுத்து, முன்பு செய்த செயல்களை நினைவில் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையே மறந்து விடுவது, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறுவது போன்ற நிகழ்வுகள் பாரம்பரியமாக தெரியும்.
இதற்கான தீர்வு முற்றிலும் இல்லை என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவுகள் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவது நோயின் தீவிரத்தை குறைக்க உதவும். தொடக்கநிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பாதிப்பை கட்டுப்படுத்தலாம். மூளைக்கு வேலை கொடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது நம் கையில்தான்!