இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick

செவ்வாய், 28 மே 2024 (19:29 IST)
மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியான நடிகராக வலம் வரும் ஃபகத்பாசில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மலையாளத்தில் மஹெஷிண்டே பிரதிகாரம், கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஃபகத் பாசில். இவர் மலையாள இயக்குனர் பாசிலின் மகன். ஆனாலும் தன் சொந்த திறமையால் சினிமாவில் கால்பதித்தவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பதற்கு முன்பாகவே நஸ்ரியாவின் கணவராகதான் முதல்முதலாக பெரிய அளவில் அறியப்பட்டார்.

சமீபத்தில் ஃபகத் பாசில் குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு குழந்தைகளோடு குழந்தையாக மாறி போன அவர் அங்கு வந்திருந்த குழந்தைகள் நல டாக்டரிடம் சில சந்தேகங்களை கேட்டார். அப்போது ஏடிஎச்டி எனப்படும் கவனக்குறைபாடு ஹைப்பர் ஆக்டிவிட்டி கோளாறு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

ALSO READ: ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அதை சிறுவயதிலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்தலாம் என டாக்டர் கூறியுள்ளார். அப்போது ஃபகத், 41 வயதில் கண்டறித்தால் குணப்படுத்த இயலாதா என்று கேட்டுள்ளார். தற்போது ஃபகத் பாசிலுக்கு சரியாக 41 வயது ஆகிறது. அவர் வயதை குறிப்பிட்டு கேட்டதால் அவருடைய இந்த வியாதி குறித்துதான் கேட்டுள்ளார் என்று தகவல் பரவியுள்ளது.

இந்த ஞாபக மறதி வியாதி உள்ளவர்கள் அதிக மறதி மற்றும் வைத்த பொருட்களை எங்கே வைத்தோம் என ஞாபகப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் இருப்பார்கள். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு இந்த ஞாபக மறதி நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்