வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

Mahendran

புதன், 19 மார்ச் 2025 (19:01 IST)
உடலில் வாய்வு ஏற்படுவது என்பது வயிற்றில் நிரம்பிய உணர்வு, அழுத்தம், வீக்கம் போன்றவை பொதுவாக குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.  மேலும் உணவை மென்று சாப்பிடாமல் அவசரமாகச் சாப்பிடுவது, பேசிக்கொண்டே உணவருந்துவது, தண்ணீரை ஒருமுறை அருந்துவது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் வயிற்றில் அதிக காற்றை சேர்க்கின்றன. 
 
குடலில் உணவு செரிமானம் ஆகும் போது, நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் சில வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் ஹைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன.
 
மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, வெங்காயம், காலிபிளவர் போன்ற உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. சீரகத் தண்ணீர் காலை, மாலை இருவேளையும் குடிக்கலாம்.
 
பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய இரண்டும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் சத்தம் அதிகம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.அதற்கு மேல் வாயு வெளியேறினால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்