சாப்பிட்ட பின்னர் குளிக்கக்கூடாது என்று கூறுவது ஏன்?

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (05:04 IST)
நாம் அன்றாடம் செய்யும் விஷயங்களில் ஒன்று குளிப்பது. குளிப்பது என்றால் சும்மா தலையை தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டால் போதும் என்று நினைக்காமல் அதையும் ஒரு கலையாக நினைத்து ரசித்து குளிக்க வேண்டும்.

 

 



மேலும் குளிக்கும் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது பலர் அறிந்திருப்பது இல்லை. குறிப்பாக சாப்பிட்ட பின்னர் குளிக்க கூடாது என்று பெரியவர்கள் காலங்காலமாக கூறி வருகின்றனர். இதற்கு விஞ்ஞானபூர்வமான காரணமும் உண்டு. சாப்பிட்ட பின்னர் ஏன் குளீக்க கூடாது என்பதை பார்ப்போம்

1. குளிக்கும் போது நம் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் ஆற்றலுடன் செயல்படும். எனவே குளித்து முடித்தவுடன் பசி எடுக்கும்.

2 சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்ய உடலில் நொதிகள் தேவைப்படுகின்றன. இந்த நொதிகள் உடல் வெப்பமாக இருந்தால் தான் சுரக்கும். சாப்பிட்டதும் குளிக்கும் போது குளிர்ச்சியால் இந்த நொதிகள் சுரக்காது. அதனால் சாப்பிட்ட பின்னர் குளிப்பது உடல் நலனுக்கு நல்லது இல்லை

3. குளித்த பின்னர் சாப்பிட்டீர்கள் என்றால் உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி உடல் ஆற்றல் பெறும்.

4. சாப்பிட்ட பின் குளித்தால் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு ஏற்படும்.

5. சாப்பிடும் போது, படிக்கும் போது வெவ்வேறு உடைகளை அணிய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். இதனால் நம் உடல் நலம் காக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்