IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபஞ்சரும்!! (பகுதி 4)

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (17:15 IST)
செயற்கை கருத்தரிப்பு முறையில் இடையூறாக வரக்கூடிய இன்னொரு பிரச்சினை பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (PCOD)! சிஸ்ட் எனப்படும் பல நீர்க்கட்டிகள் கருப்பையில் உருவாகும் பிரச்சினையை தான் ஓவரியன் சின்றோம் (PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்கிறோம்.
 

 

 
இதனால் கருப்பையில் வீக்கம் ஏற்படும், ஹார்மோன்களின் சமசீரின்மை (Imbalanced Harmone) பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.
 
மாதவிலக்கு சுற்று ஒழுங்கற்று (Improper Menstruation Cycle) போகும். தள்ளி தள்ளி போகும், உடல் பருமன் ஏற்படும், முகத்தில் முடி வளர்ச்சி காணப்படலாம்.  உடலில் பல இடங்களில் முடிவளர்ச்சி அதிகமாக காணப்படும். இவ்வாறு பல அறிகுறிகள் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும் என்றும் சொல்லிவிட முடியாது. அறிகுறிகள் இல்லாமலும் இந்த PCOD பிரச்சினை இருக்கும்!
 
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்துக்கொள்ளும்போது இந்த பிரச்சினையை எளிதாக கண்டுப்பிடித்துவிடலாம். உடல் எடை, உடல் பருமன், உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, உடல் எடையை குறைக்க தேவையான பயிற்சிகளை செய்ய சொல்வார்கள். மாத்திரைகள் மூலமாகவும் இதை குறைப்பார்கள். தற்பொழுது லேப்ராஸ் கோபிக் மூலம் இவற்றை சரிசெய்துவிடுகின்றனர்.
 
இந்த கட்டிகளால் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்ட பின்புதான் செயற்கை கருத்தரிப்பு முறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது!
 
செயற்கை கருத்தரிப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து, இந்த கருப்பை நீர்கட்டிகளை முழுவதுமாக நீக்கிவிடுகின்றனர் என்றாலும் இது லைனிங் எனப்படும் கர்ப்பப்பை சுவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் அதோடு இல்லாமல் இந்த செயற்கை கருத்தரிப்பிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக என்பதற்காக கருமுட்டையை வெற்றிகரமாக வைக்கும் வரை (Embryo Transfer) அக்குபஞ்சர் சிகிச்சையை இதோடு இணைத்து எடுத்துக்கொள்ள மேற்குலக நாடுகளின் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
அக்குபஞ்சர் மருத்துவத்தை பரிந்துரைக்க காரணம் ஹார்மோன்களின் சமச்சீரின்மையை எளிதாக மருந்துகளின்றி பக்கவிளைவுகளின்றி அக்குபஞ்சர் சமன் படுத்திவிடுகிறது. 
 
எனவே செயற்கை கருத்தரிப்பில் ஏற்படக்கூடிய PCOD/PCOS பிரச்சினையை முற்றிலும் நீக்க அக்குபஞ்சர் உதவுகிறது. 
 
IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபஞ்சரும் தொடரும்.....
 
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபங்க்சர் மருத்துவர்
 









வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குதி  - 3 ஐ பார்க்க ....

குதி - 2 ஐ பார்க்க....
 
 
அடுத்த கட்டுரையில்