ஆற்றில் மூழ்கிய பாகனை காப்பாற்றிய யானைக்குட்டி (வீடியோ)

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (19:04 IST)
தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயத்தில் யானை பயிற்சியாளர், ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரால் இழுத்து செல்வது போல் நடித்தார். உடனே யானை குட்டி ஒன்று ஓடு வந்து அவரை காப்பாறியது.


 

 
தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கு ஹம் லா என்ற ஐந்து வயது பெண் யானை ஒன்று உள்ளது. அதற்கு பயிற்சியாளர் டாரிக் தாம்சன் என்பவர்.
 
டாரிக் தாம்சன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். இந்த யானை குட்டி கரையில் மற்ற யானைகளுடன் நின்றுக்கொண்டிருக்கிறது. இவர் திடீரென்று ஆற்று தண்ணீரில் அடித்து செல்வது போல் நடிக்கிறார். 
 
அதைக்கண்டு அந்த யானைக்குட்டி தண்ணீரில் ஓடி வந்து டாரிக்கை காப்பாற்றுகிறது. இந்த காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இதுகுறித்து டாரிக் தாம்சன் கூரியதாவது:-
 
நான் அந்த யானை மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். அதேபோல் அந்த யானையும் என் மீது பாசம் வைத்துள்ளது. அதை நான் சோதிக்கவே தண்ணீரில் மூழ்குவது போல் நடித்தேன். 
 
ஆனால் அது உண்மை என்று கருத்தி என்னை காப்பாற்ற ஓடி வந்தது, என்றார்.
 
நன்றி: Amerco News
அடுத்த கட்டுரையில்