டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

Prasanth Karthick

வெள்ளி, 29 நவம்பர் 2024 (15:18 IST)

இந்திய பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழக ஆணையக் குழு (University Grant Commission) பட்டப்படிப்புகளை முன்னதாகவே படித்து முடிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.

 

 

இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளை இயக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் பல்கலைக்கழக ஆணையக் குழுவின் விதிமுறைகளின் கீழ் இயங்கி வருகின்றன.

 

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பில் புதிய முறையை அறிமுகம் செய்ய யூஜிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி இளங்கலை பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பினால் தங்களது கல்வியை ஒரு ஆண்டு முன்னதாகவே முடித்துக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 

ALSO READ: காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?
 

உதாரணமாக, மாணவர் ஒருவர் 3 ஆண்டு கால இளங்கலை அறிவியல் பாடம் படிக்கிறார் என்றால், அவர் தனது படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளிலேயே முடித்துக் கொள்ளலாம். ஆனால் மூன்றாவது ஆண்டுக்கான பாடங்களையும் 2ம் ஆண்டிலேயே சேர்த்து எழுத வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. அதே போல மாணவர்கள் விரும்பினால் தங்களது படிப்புக் காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து 3 ஆண்டு கால பட்டப்படிப்பை 4 ஆண்டுகளுக்கு தொடரவும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

இந்த முறையின் கீழ் பயில விரும்பும் மாணவர்களின் தகுதியை மதிப்பிட உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குழுவை அமைத்து மதிப்பாய்வு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இந்த முறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்