ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

Mahendran

வெள்ளி, 29 நவம்பர் 2024 (14:16 IST)
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று நேற்று கூறப்பட்ட நிலையில், இன்று மீண்டும் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், 3 மணி நேரத்தில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது, இன்றும் நாளையும் அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று ஐந்து மாவட்டங்களிலும், நாளை ஏழு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று ரெட் அலர்ட் விடப்பட்ட மாவட்டங்கள்:

செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்

நாளை ரெட் அலர்ட் விடப்பட்ட மாவட்டங்கள்:

சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
கள்ளக்குறிச்சி

இந்த ரெட் அலர்ட் விடப்பட்ட மாவட்டங்களில் 21 செ.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நாளைய தினம் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட மாவட்டங்கள்:

பெரம்பலூர்
திருவாரூர்
புதுக்கோட்டை

சென்னையில் நாளை மிக அதிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்