கோலிவுட்டின் டாப் 10 நடிகர்கள் யார்? 2019 ஸ்பெஷல்!!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (12:25 IST)
2019 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களின் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்.... 
10. விஷால்: 
நடிகர் விஷால் தனது உயரத்திற்கு ஏற்றார் போல மாஸ் அக்‌ஷன் படங்களை இந்த ஆண்டு தேர்வு செய்து நடித்துள்ளார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அயோக்கியா, ஆக்‌ஷன் ஆகிய இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் அவர் 10வது இடத்தை பிடித்துள்ளார். 
 9. விக்ரம்: 
நடிகர் விக்ரமுக்கு இந்த ஆண்டு நிறைய படங்கள் இல்லையென்றாலும் ரசிகர்களை அப்செட்டாக்காமல் இருக்க கடாரம் கொண்டான் படம் மட்டும் வெளியானது. இதனையடுத்து அவரின் துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே அவருக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. 
8. சூர்யா: 
சமீப காலமாக சூர்யா தனது கதை தேர்வுகளில் கோட்டைவிட்டு வருகிறார். அதன்படி இந்த ஆண்டு என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு பாடங்கள் சூர்யா நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. இதனால் அவருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. 
7. சிவகார்த்திகேயன்: 
நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராகவும் தமிழ சினிமாவின் முன்னணி நடிகராகவும் வளர்ந்து வருகிறார். தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பல முகங்களை இந்த ஆண்டு வெளிக்காட்டிய சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மனம் கவர்ந்தவரில் சிவகார்த்திகேயன் 7வது இடத்தை பெற்றுள்ளார். 
6. விஜய் சேதுபதி: 
ஹீரோ, வில்லன் என நடிகர் விஜய் சேதுபதி சிறந்த படங்களையும் சொதப்பல் படங்களையும் இந்த ஆண்டு கொடுத்துள்ளார். சூப்பர் டிலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், பேட்டையில் ரஜினிக்கு வில்லனாகவும் தற்போது தளபதி 64-ல் வில்லனாகவும் சினிமாவில் உலாவரும் இவர் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார். 
5. கார்த்தி: 
கதை தேர்வுகளில் அண்ணன் சூர்வை மிஞ்சியுள்ள நடிகர் கார்த்தி கைதி படம் மூலம் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தார். அண்ணி ஜோதிகாவுடனான தம்பி படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதே கார்த்தி தான் தேவ் எனும் தோல்வி படத்தையும் இந்த ஆண்டு கொடுத்துள்ளார். எனவே அவருக்கு 5 வது இடம் கிடைத்துள்ளது. 
4. தனுஷ்: 
கடந்த ஆண்டு வடசென்னையில் பயங்கரமாக நடித்து வியக்க வைத்த தனுஷ், இந்த ஆண்டு அசுரன் எனும் படைப்பில் தனது நடிப்பால் பிரம்மிக்க வைத்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினர் மத்தியில் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்தது. இதனோடு பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வெளியான எனை நோக்கி பாயும் தோட்டாவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் 4வது இடத்தை பிடித்துள்ளார். 
3. விஜய்: 
தமிழ சினிமாவில் அதிக ரசிகர்களை கவந்துள்ள நடிகர் விஜய் ஆண்டுக்கு ஒரு படம் என்ற பாலிசியை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிகில் படம் இவர் நடிப்பில் வெளியானது. படம் ஹிட் அடித்து ரசிகர்களுக்கும் பிடித்தமானதாய் இருந்தது. இந்த வருடம் விஜய் 3வது இடத்தை பிடித்துள்ளார். 
2. அஜித் குமார்: 
நடிகர் அஜித்தின் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இந்த படங்களிலும் சிலுக்கவைக்கும் நடிப்பை அஜித் வெளிப்படுத்தியிருந்தார். அஜித்தின் மெசூரிட்டியான நடிபை இந்த படங்கள் வெளிகொண்டுவந்தது. அதன்படி அஜித் டாப் 10 ஹீரோக்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 
1. ரஜினிகாந்த்: 
ஒரே சூப்பர் ஸ்டார் அது என்றுமே ரஜினிதான். எந்த படங்கள நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்தான் கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஆக இருக்கிறார். இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் பேட்ட படம் வெளியானது. இந்த படத்தில் விண்டேஜ் ரஜினியின் மேனரிசத்தை கண்டு ரசிகர்கள் கொண்டாடினர். அடுத்த ஆண்டு முதல் மாதமே பொங்கலுக்கு இவரது தர்பார் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்