உபர் ஈட்ஸ் நிறுவனம் விற்பனை – கைப்பற்றியது சொமட்டோ !

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (18:33 IST)
உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் முழுவதையும் சொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் உணவு விநியோக தொழிலில் ஸொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு விநியோகத்தில் கால்பதித்த உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களில் சுமார் 26,000 உணவகங்களைக் கைவசம் வைத்திருந்தது.

ஆனால் போட்டியை சமாளிக்க முடியாத உபர் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஸொமாட்டோவுடன் விற்பனைப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருந்தது. இதையடுத்து தற்போது 150 மில்லியன் டாலர் பெற்றுக்கொண்டு ஸொமட்டோ நிறுவனத்திடம் தனது நிறுவனத்தை விற்பனை செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்