இன்று முதல் உபேர் ஈட்ஸ் கிடையாது: ஏன் தெரியுமா?

செவ்வாய், 21 ஜனவரி 2020 (09:51 IST)
இந்தியாவில் உபேர், சொமைட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் உபேர் ஈட்ஸ் நிறுவனம் சொமைட்டோ நிறுவனத்துடன் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து உபேர் ஈட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நேரடி உணவகங்கள் மற்றும் டெலிவரி கூட்டாளிகள் அந்த நிறுவனத்தின் செயலியில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் சொமைட்டோ உணவு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனினும் உபேர் நிறுவனத்தின் மற்ற நாடுகளில் உள்ள கிளைகள் விற்பனை செய்யப்படவில்லை என்றும் இந்திய கிளைகள் மட்டுமே கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
உலகின் ஆன்லைன் நிறுவனத்தின் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் அலிபாபா நிறுவனத்திடமிருந்து நிதி பெற்று உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை சொமைட்டோ வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சொமைட்டோ தலைமை செயல் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது உபேர் ஈட்ஸ் இந்தியாவில் இனி சொமேட்டோ என்று அறிவித்துள்ளார் இந்த ’இனி உபேர், சொமைட்டோ என அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு உபே மற்றும் சொமைட்டோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் சொமைட்டோ நிறுவனத்திற்கு தற்போது ஸ்விக்கி என்ற நிறுவனம் மட்டுமே போட்டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Uber Eats India is now Zomato. Here's to better food for more people, and new beginnings.

For more details: https://t.co/cq8Wp9ikOk pic.twitter.com/nK4ICY2ikW

— Deepinder Goyal (@deepigoyal) January 21, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்