தீபாவளி சேல்: சியோமி மாஸ்... சாம்சங் க்ளோஸ்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:48 IST)
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிரது. இதுவரை முன்னணியில் இருந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. 
 
ஆம், தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மீது பல சலுகைகளை அறிவித்தது. தீபாவளி சேல்லில் மொத்தமாக சியோமி நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது என்ர தகவல் வெளியாகியுள்ளது. 
 
சுமார் 60,00,000-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் 4,00,000-க்கும் அதிகமான எம்ஐ டிவி மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர சாதனங்கள் என மொத்தம் சியோமியின் 85 லட்ச சாதனங்கள் விற்பனையாகியுள்ளதாம். 
 
எம்ஐ.காம், அமேசான், பிளிப்கார்ட், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுக்க நடைபெற்ற ஆஃப்லைன் வர்த்தகத்தில் இத்தகைய விற்பனையை சியோமி பதிவு செய்துள்ளது. 
 
கடந்த ஆண்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையை விட இந்த ஆண்டு அதிக விற்பனையை சியோமி கண்டுள்ளது. மேலும், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்துள்ள சியோமி, சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்