150K+ விற்பனை... 3 நிமிடத்தில்: இந்திய சந்தையில் சீன நிறுவனம் ஆதிக்கம்!!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (14:16 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதிக அளவில் காணப்படுகிறது. சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை உச்சத்தில் உள்ளது.


 
 
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி Y1 மற்றும் Y1 லைட் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு வந்தது. 
 
முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கிய முதல் மூன்று நிமிடங்களில் 1.5 லட்சம் சாதனங்களை விற்பனையானது. இதனை சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரெட்மி Y1 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.8,999 மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.10,999 என்ற விலையில் விர்பனை செய்யப்படுகிறது.  
 
ரெட்மி Y1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்