எப்போ என்ன செய்ய வேண்டுமென அவருக்கு தெரியும்; தோனி குறித்து புவனேஷ்வர்

புதன், 8 நவம்பர் 2017 (12:30 IST)
போட்டியின்போது எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என அவருக்கு தெரியும் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளளில் விளையாடியது. ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 போட்டிகளிலும் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது.
 
நேற்று 3வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய ஆபாரமாக செயல்பட்டு போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தொடரை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் போட்டியை வென்று தொடரை கைப்பற்ற முடிந்தது என்று கூறினார்.
 
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கூறியதாவது:-
 
ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களை குற்றம் சாட்டக்கூடாது. நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கொலின் முன்ரோ எங்களுக்கு சிரமம் கொடுத்து வருகிறார். 
 
கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். தோனியின் ஆட்டத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை. போட்டியின்போது எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என அவருக்கு தெரியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்