வியட்நாம் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் சீனாவின் தைபேவின் சாய் பிங்கையும், அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபாஸா கொமுராவையும் வென்றார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தென்கொரியாவின் கிம் ஹையங் மி என்பவருடன் மோதினார்.